சிவகங்கை: சிவகங்கை நகர் தெப்பக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் பாஸ்கரன் உறுதி அளித்துள்ளார். சிவகங்கை நகராட்சியின் நிதி நிலைமை மோசமாக உள்ளதால் பணியாளர்களுக்கு ஊதியம், மின்கட்டணம் உள்ளிட்ட நிர்வாக செலவுகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. திட்ட பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்கள், அதற்குரிய பணத்தை வாங்க நகராட்சி அலுவலகத்திற்கு தினமும் அலைந்து வருகின்றனர். மேலும் சாலை சீரமைப்பு, தெருவிளக்குள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருந்து வருகிறது. அரசிடம் இருந்து ஏதேனும் சிறப்பு நிதி கிடைத்தால் மட்டுமே வளர்ச்சி பணிகளை தொடர முடியும் என்ற நிலை இருந்துவருகிறது. இதுகுறித்து அமைச்சர் பாஸ்கரனிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தெப்பக்குளத்தை சீரமைக்க கேட்டு கொள்ளப்பட்டது. திட்ட மதிப்பீடு தயாரித்து கொடுத்தால், அதற்குரிய நிதி பெற்றுத் தரப்படும் என, அமைச்சர் தெரிவித்தார்.