பதிவு செய்த நாள்
14
ஜூன்
2016
11:06
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு, 40.25 லட்சம் ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள், பேருந்து, கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அங்கு, வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாததால், நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இதையடுத்து, பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்தம் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின், வாகனங்கள் செல்வதற்கு வசதியாக கோவில் நிதியில் இருந்து, 40.25 லட்சம் ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி, நேற்று துவங்கியது. முதற்கட்டமாக ஜல்லிகற்கள் கொட்டி சீரமைக்கப்பட்டது. நேற்று காலை முதல், தார்ச்சாலை அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. இப்பணிகள் ஓரிரு நாட்களில் முடிந்து, வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.