பதிவு செய்த நாள்
14
ஜூன்
2016
11:06
கோவை: இருகூர் மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம், ஜூன் 16ல் நடக்கிறது. இருகூரில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகம் ஜூன் 16ல் நடக்கிறது. இதற்கான விழா, நாளை காலை, 6:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. காலை, 6:00 முதல் 10:00 மணி வரை, முதல் கால வேள்வி, புனித தீர்த்தங்கள் அழைப்பு, புற்று மண் எடுத்து வருதல், முளைப்பாரி அழைப்பு, கலைமகள் வழிபாடு நடக்கிறது. மாலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை, இரண்டாம் கால வேள்வி, சிவகணநாதர் வேள்வி சிறப்பு வழிபாடு, சூரிய சந்திர வழிபாடு, காப்பு கட்டுதல் நடக்கிறது. ஜூன் 16 காலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால வேள்வி, திருப்பள்ளி எழுச்சி, திரவிய வேள்வி, மங்கள வேள்வி வழிபாடு, சிறப்பு பூஜை, அர்ச்சனை வழிபாடு, பரிவார மூர்த்தி கோவிலுக்குள் எழுந்தருளல், கலசங்கள் வலமாக கோவிலை சுற்றி ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லுதல் நடக்கின்றன. காலை, 7:53 முதல் 9:00 மணிக்குள், மகா கும்பாபிஷேகம், மகா தரிசனம், மகா அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது.