மதுரை: இந்து கோயில்களில் பாதுகாப்பு என்ற பெயரில் பக்தர்களை போலீசார் தொட்டு சோதனையிட தடை விதிக்க வேண்டும் என இந்து ஆலயப்பாதுகாப்புக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் மதுரை மாவட்ட கூட்டம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் இல.அமுதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவிசங்கர் வரவேற்றார். கோயில்களில் பொருளாதார தீண்டாமை கூடாது. இதை கண்டித்து தர்ம தரிசனம் செய்ய வலியுறுத்தி ஜூலை 8ல் பிரசார இயக்கம் நடத்துவது. இந்து கோயில்களில் பாதுகாப்பு என்ற பெயரில் பக்தர்களை போலீசார் தொட்டு சோதனையிடுவது அருவருப்பையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்துகிறது. போலீசாருடன் மோதல் ஏற்படும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே ஸ்கேனர் கருவிகளை வாங்கி பக்தர்கள் கவுரவத்துடன் சுவாமி தரிசனம் செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.