மதுராந்தகம்: மதுராந்தகம், ஏரி காத்த ராமர் கோவிலின் பிரம்மோற்சம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமர் கோவில், பிரசித்தி பெற்றது. இக்கோவில் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், விழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 5:00 மணிக்கு, கொடி ஏற்றப்பட்டது. வரும் 27ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், நாளை கருட சேவையும், 21ம் தேதி தேர்த்திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. கொடியேற்றம் முடிந்த பின், சுவாமி வீதிவுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.