பதிவு செய்த நாள்
16
ஜூன்
2016
11:06
ஆர்.ஏ.புரம்: ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளைக்கு, மகேந்திரா பைனான்ஸ் சார்பில், நன்கொடையாக, ‘ஆம்புலன்ஸ்’ வழங்கப்பட்டது. ஆர்.ஏ.புரம், சுந்தரத்தில் உள்ள சத்ய சாய் மந்திரில், நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், மகேந்திரா பைனான்ஸ் சார்பில், ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளைக்கு நன்கொடையாக, ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டது. இந்த வாகனத்தில், இ.சி.ஜி., முதலுதவி கருவிகள் என, அதிநவீன வசதிகளும் உள்ளன. வாகனத்துக்கான சாவியை, மகேந்திரா பைனான்ஸ் தலைமை நிதி அலுவலர் ரவி வழங்க, தமிழ்நாடு ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை அமைப்பாளர் டாக்டர் மோகன் பெற்றுக் கொண்டார்.