சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆனி தேரோட்டம் நேற்று நடந்தது. ஜுலை 11 ல் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் உபயதார்கள் மண்டகப்படியில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பகல், இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று மாலை 5:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுந்தனர். பெரிய தேரில் பிரியாவிடை சமேத சொக்கநாதரும், சிறிய தேரில் மீனாட்சிஅம்மனும் சென்றனர். சப்ரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஷ்வரர் சென்றனர். ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். சுவாமி வண்டித்தடம் பார்க்கும் நிழ்ச்சி நடந்தது. சிவகங்கை தேவஸ்தானம், முறையூர் கிராமத்தார் விழா ஏற்பாடுகளை செய்தனர். இன்று பகல் ஒரு மணிக்கு சுவாமி தீர்த்தவாரி, இரவு பூத்தட்டு விழா நடக்கிறது.