சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த ஜூன்12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 11:05 மணிக்கு துவங்கியது. நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்த தேர் மதியம் 1:05 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் திருத்தேரின் வடத்தை பிடித்து கோவிந்தா, கோபாலா என்ற கோஷமிட்டப்படி இழுத்தனர். இதன் பின் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. நுாற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாத்துார், படந்தால், பெரியகொல்லபட்டி, வெங்கடாசலபுரம், சடையம்பட்டி, சத்திரப்பட்டி,ஒத்தையால், ஓ.மேட்டுப்பட்டி, அணைக்கரைப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.