பதிவு செய்த நாள்
22
ஜூன்
2016
11:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இன்னும் இரண்டு மாதத்தில் பணிகள் நிறைவடையும் என, கோவில் அதிகாரி தெரிவித்தார். வழக்கில் சிக்கியுள்ளவர்கள், இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றால் நல்லது நடக்கும் என்பது, காந்தி சாலையில் உள்ள, வழக்கறுத்தீஸ்வரர் கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு போதிய வருவாய் இல்லாததால் பிரம்மோற்சவமும் நடைபெறவில்லை. கோவிலை சீரமைத்து, ராஜ கோபுரம் கட்ட தீர்மானித்து, 2014ம் ஆண்டு திருப்பணிகள் துவங்கின. அதன் படி, ராஜகோபுரம், 36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. முன் மண்டபம், 18 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய், சுற்றுப் பிரகாரம், 6 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய், அன்னதான கூடம், 14 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாயில் பணிகள் நடைபெறுகின்றன.