பதிவு செய்த நாள்
22
ஜூன்
2016
11:06
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எடையூர் மகா மாரியம்மன் கோவிலில் நாளை (23ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, இன்று (22ம் தேதி) காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, காப்பு கட்டும் நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணிக்கு மேல் முதல்கால யாக பூஜை, இரவு 10:30 மணிக்கு மேல் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை (23ம் தேதி) காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 10:15 மணிக்கு மேல் தீபாராதனை, கடம் புறப்பாடு, 10:30 மணிக்கு விநாயகர், முருகன், மகா மாரியம்மன், காத்தவராயன் சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது.