Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தங்கல் நின்ற நாராயணப் ... ஆனி திருவோண நட்சத்திர விழா: ராஜநாராயண பெருமாள் வீதியுலா ஆனி திருவோண நட்சத்திர விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூவேந்தரும் திருப்பணி செய்த பெரியாவுடையார் கோயில்!
எழுத்தின் அளவு:
மூவேந்தரும் திருப்பணி செய்த பெரியாவுடையார் கோயில்!

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2016
11:06

பழநி: கண்ணுக்கு இனிமை, கருத்துக்கு வளமை, தெய்வீக களையென பல்வேறு அம்சங்கள் நிறைந்த கழனி சூழ் நிலங்கள் பழநியில் நிறைய உள்ளன. பழநியில் இருந்து 3 கி.மீ., துாரத்திலுள்ள கோதைமங்கலம் சண்முகநதி கரையில் உள்ள பெரியாவுடையார் சிவன்கோயில் இவ்வகையில் அருஞ்சிறப்பு வாய்ந்தது.  இக்கோயில் அமைந்துள்ள இடம் கன்னிகாவனம் என தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. சேரர், பாண்டிய, கொங்குசோழ மன்னர்களால் ஆயிரம் ஆண்டுகளாக திருப்பணி செய்த சான்றுகள் உள்ளன. ஈஸ்வரன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கியவாறு பிரகதீஸ்வரர் என்ற பெரியாவுடையார் பெயரில் அருள்பாலிக்கிறார்.  கோயில் மதில்களில் பொறிக்கப்பட்ட 16 கல்வெட்டுகளை ஆராய்ந்ததில் சேரர் வம்சத்தை சேர்ந்த வீரகேரள, வீரநாரணர், அமரபுயங்கவர்மன், அதிராச ராசதேவன், வீரகேரளவர்மன், சோழர் வம்சத்தை சேர்ந்தபரகேசரிவர்மன், வீரநாரண அதிசய சோழதேவர், பாண்டியர் வம்சத்தை சேர்ந்த திருப்புவன சக்ரவர்த்தி, கோனேரின்மை கொண்டான் ஆகியோரால் திருப்பணிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

பொதுவாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகள் அருள்பாலிக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு மூலவர் லிங்க வடிவத்தில் இருந்தாலும், சிவன் உருத்திராகவும், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கு தனி சன்னிதிகளும் உள்ளன. விநாயகர், மூம்மூர்த்திகளுடன், நவக்கிரகங்கள், கன்னிமார், கருப்பணசாமி போன்ற தெய்வங்களுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமியில் ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். இலக்கியம் காட்டும் இன்பச் சோலை சூழ்ந்த பெரியாவுடையார் கோயிலை தரிசிக்க வேண்டாமா? டயல்பண்ணி (04545-242 236) விபரம் கேட்டுட்டு புறப்படுங்க.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar