பதிவு செய்த நாள்
25
ஜூன்
2016
12:06
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் கிராமத்தில் சின்னமுத்து அம்மன், வீரன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 22ம் தேதி காலை கணபதி ஹோமம், மகா பூர்ணாகுதி தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு மேல் 2ம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, லட்சுமி பூ ஜை, யாத்ராதானம், தீபாராதனையும் தொடர்ந்து 10:00 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கீழக்குப்பம் முன்னாள் ஊராட்சித் தலைவர் வேணு, நிலக்கிழார் சிவலிங்கம், பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனர் மாயகிருஷ்ணன், இயக்குனர் தேவநாதன், முந்திரி ஏற்றுமதியாளர் சங்கச் செயலர் ராமகிருஷ்ணன், ரத்தனா மெட்ரிக் பள்ளி இயக்குனர் பாலகிருஷ்ணன், முதல்வர் ரவி உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.