காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிராம பகுதிகளில் உள்ள கோவில்கள் பல சிதிலமடைந்து, வழிபாடு செய்ய முடியாத கோவில்களை சீரமைத்து, வழிபாட்டுக்கு கொண்டு வர, ஒவ்வொரு கோவிலுக்கும் தமிழக அரசு, 50 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்த ஆண்டு, 75 கோவில்களுக்கு, 37 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.