திருவாடானை: திருவாடானை அருகே இலுப்பக்குடி அய்யனார் கோயில் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நடந்த புரவி எடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கோயில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. இலுப்பக்குடி மற்றும் சுற்றுபகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.