விழுப்புரம் : கூரானூர் சித்திவிநாயகர், தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் அடுத்த அரசூர் அருகே உள்ள கூரானூர் கிராமத்திலுள்ள சித்திவிநாயகர், தண் டாயுதபாணி மற்றும் இடும்ப மூர்த்தி கோவில்கள் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. வரும் 15ம் தேதி காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி நவக்கிரக ஹோமங்கள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி மிருத்சங்கிருஹனம், ரக்ஷா பந்தனம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சியும், முதல் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது. வரும் 16ம் தேதி காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு கலசம் புறப்பாடு நடந்து புனித நீர் கொண்டு வந்து சித்தி விநாயகர், தண்டாயுதபாணி, இடும்பமூர்த்தி கோவில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.