புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று ரதோற்சவம் நடந்தது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி காலை 11 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை காலை, மாலை இரண்டு வேளையும் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதியுலா நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு ரதோற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று காலை 9 மணிக்கு கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் , 25ம் தேதி மதியம் 12 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வேங்கடேசன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.