சோழவந்தான் பள்ளிவாசலில் லைலத்துல்கத்ரு சிறப்பு தொழுகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2016 11:07
சோழவந்தான்: சோழவந்தான் நைனார் ஜூம்மா தொழுகை பள்ளிவாசலில் லைலத்துல்கத்ரு புனிதஇரவு சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம்கள் 30 நாட்கள் நோன்பு இருக்கின்றனர். புனித நுாலான திருக்குரான் அருளப்பட்ட ரமலான் மாதத்தில் 27ம் நாள் இரவு லைலத்துல்கத்ரு புனிதஇரவாக கடைபிடிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் இந்நாளையொட்டி, இப்பள்ளி வாசலில் தராவீஹ் சிறப்பு தொழுகையை தொடர்ந்து, நள்ளிரவு வரை திருக்குரான் நுாலின் மகத்துவம் குறித்த சொற்பொழிவு மற்றும் பிரார்த்தனை நடந்தது. புத்தாடை அணிந்து முஸ்லிம்கள் தொழுகையில் பங்கேற்றனர். ஜமாத் கமிட்டி தலைவர் ஹாஜி அபுபக்கர் தலைமையில் அஜ்ரத் நெகமத்துல்லா சிறப்பு தொழுகையை நடத்தினார். இஸ்லாமிய இளைஞர் அமைப்பினர் விருந்தோம்பல் நிகழ்ச்சியினை செய்திருந்தனர்.