விவேகானந்தர் நினைவு தினம் : கன்னியாகுமரியில் அன்னபூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2016 11:07
நாகர்கோவில்: சுவாமி விவேகானந்தரின் 114-வது நினைவு தினத்தையொட்டி நேற்று கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் அன்னபூஜை நடந்தது. சுவாமி விவேகானந்தர் 1902ம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி சமாதி அடைந்தார். அவரது 114-வது நினைவு தினம் நேற்று கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் அனுசரிக்கப்பட்டது. இதற்காக 26 டன் அரிசியை மலைபோல் குவித்து வைத்து, அதில் அலங்காரம் செய்து சுற்றிலும் குத்துவிளக்கேற்றி அன்னபூரணி சிலை வைத்து பெண்கள் பூஜை நடத்தினர். இந்த அரிசி ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேந்திர தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்டது.கேந்திரா துணை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ரதிவிவேகானந்தன் பூஜையை தொடங்கி வைத்தார். கேந்திரா கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் அன்னபூஜை பற்றி விளக்க உரை நிகழ்த்தினார். தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பகவத்கீதை படித்து விஸ்வரூப தரிசனம் நடந்தது.