திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2016 11:07
திருமலைக்கேணி: சாணார்பட்டி அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமிகோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டு தோறும் ஆனி அமாவாசை அன்று திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பக்தர்கள் திருவிழாவிற்காக இங்கிருந்து தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம். இந்த ஆண்டும் திரளான பக்தர்கள் புனித நீராடி தீர்த்தம் எடுத்து சென்றனர். நத்தம் கைலாசநாதர் கோயிலில் உள்ள தண்டபாணி சுவாமி கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.