பதிவு செய்த நாள்
05
ஜூலை
2016
12:07
திருப்போரூர்: திருப்போரூர், பிரணவ மலை கைலாசநாதர் கோவிலில், சனி பிரதோஷ விழாவில், ஏராளமானோர் பங்ககேற்றனர். அகத்திய முனிவர், சிவபெருமானிடம் பிரணவத்தின் அர்த்தத்தை கேட்க, பிரணவமே மலையாக உருவெடுத்ததால், பிரணவ மலை என, அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற திருப்போரூர், பிரணவ மலையில், சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், முதலில், மாலை, 4.30 மணிக்கு நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின், பாலாம்பிகை, கைலாசநாதருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, உற்சவ மூர்த்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, மூன்று முறை கோவிலை வலம் வந்தார். பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.