பதிவு செய்த நாள்
07
ஜூலை
2016
11:07
சிவகங்கை: கே.சொக்கநாதபுரம் கல்லல் மதகுபட்டி ரோட்டில் உள்ள மஹா உக்ரபிரத்தியங்கிராதேவி கோயிலில் 9ம் ஆண்டு விழாவையொட்டி ஸ்ரீசதசண்டி மகா யக்ஞம், லட்சார்ச்சனை நடந்தது. முதல் நாளன்று கோ பூஜை, ஸப்தஸசி பாராயணம்,லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனையும், இரண்டாம் நாள் கணபதி பூஜை, தசமஹா ஹோமங்கள், தீபாராதனையும், மூன்றாம் நாள் சண்டிஹோமமும்,அமாவாசை, உக்ரபிரத்தியங்கிரா யாகமும் நடந்தது. மூன்று நாட்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கே. சொக்கநாதபுரம் சாக்த ஐயப்ப சுவாமி,மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.