பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
02:07
கிருஷ்ணராயபுரம்: புணவாசிப்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன், பகவதியம்மன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடப்பதால், காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து, யானை மீது வைத்து கொண்டு செல்லப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் யூனியன், புணவாசிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன், பகவதியம்மன், மதுரைவீரன், கருப்பண்ண சுவாமி ஆகிய பரிவார சுவாமிகளுக்கு, வரும், 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவிற்கு புனித நீர் கொண்டு செல்ல, நேற்று காலை, 11.30 மணியளவில், காவிரி ஆற்றில் இருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீர்த்தக் குடத்தை யானை மீது வைத்து எடுத்து சென்றனர். இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து, பழைய கரூர், திருச்சி சாலை, லாலாப்பேட்டை வழியாக, மதியம், 2 மணியளவில் கோவிலுக்கு சென்றனர். பின்னர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை, ஊர்மக்கள் செய்திருந்தனர்.