பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
02:07
அன்னுார் : அன்னுார் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. அன்னுார், கோவை ரோட்டில், செல்வ விநாயகர் கோவிலில் கன்னி மூல கணபதி, முருகப்பெருமான், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரக சன்னதியில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா இன்று காலை விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. மாலையில், காப்பு கட்டுதல், வேள்வி பூஜை துவக்கம், எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை (10ம் தேதி) அதிகாலையில் யாக பூஜை நடக்கிறது. காலை 7:00 மணிக்கு விமானம், செல்வ விநாயகர், கன்னி மூல கணபதி, முருகர், துர்க்கை, தட்சிணா மூர்த்தி மற்றும் நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், மகா அபிஷேகம், அன்னதானம் வழங்குதல் நடக்கிறது.