பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
11:07
திருப்பூர்: திருப்பூர் செரீப் காலனி, டவுன் எக்ஸ்டென்சன் மூன்றாவது வீதியில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர், மங்காளம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரர், ஸ்ரீதேவி பூமிதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் ஆலய, சக பரிவார மூர்த்திகள், மஹா கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. காலை, 5:30க்கு, திருமுறை பாராயணம் நடைபெற்றது; காலை, 6:00க்குஆறாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 8:30க்கு, கலசம் ஆலயம் வலம் வந்தது; அனைத்து விமான கோபுர கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. 9:30க்கு, சித்தி விநாயகர் கும்பாபிஷேகம், முத்து சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. பக்தர்களுக்கு, புனித நீர் தெளிக்கப்பட்டது. சுவாமி தரிசனத்தை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் தலைவர் சிவக்குமார், சாந்தி மற்றும் கணேஷ், வெள்ளைசாமி உட்பட, அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கும்பாபிஷேக விழா குழுவினர் செய்திருந்தனர்.