Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி வேதபுரீ தட்சிணாமூர்த்தி கோயில் ... திருப்பூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா! திருப்பூர் சித்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
11:07

பரமக்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வராள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடக்கிறது. மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் பரமக்குடி வைகை நதிக்கரையில் திருநாவுக்கரசர் பாடியருளிய இக்கோயில் மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் பரமக்குடி வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது. கடம்ப மரத்தின் கீழ் சுயம்புவாக உருவாகிய இக்கோயிலில் 1945 ம் ஆண்டு ஜன., 19 ல் ஆயிர வைசிய மஞ்சப்புத்துõர் செட்டியார்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் நன்கொடையாளர்கள் நிதி உதவியுடன் 1958 டிச.,14 ல் ராஜகோபுரம், சுவாமி சந்நதிகள் உருவாக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலஸ்தான திருப்பணிகளுக்கு பின் 1966 ஜூன் 5 ல் நடந்த கும்பாபிஷேக விழாவில் அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலம், ராமநாதபுரம் மன்னர் நாகநாத சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆயிர வைசிய சமூக நலச்சங்கம் பொறுப்பேற்ற பின் இக்கோயிலில் 1998 நவ. 29 ல் மகா அபிஷேகம் நடந்தது. இதன்பின் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பரமக்குடி மக்களை வாட்டி வதைத்த வறட்சி நீங்கி மழை பொழிவதற்காக 2014 ல் திருவண்ணாமலை தவத்திரு தாமோதரன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. அன்றைய தினம் மழை கொட்டித்தீர்த்தது குறிப்பிட தக்கதாகும். தற்போது மீண்டும் ஆயிர வைசிய சமூக நலச்சங்கத்தின் முயற்சியால் மீனாட்சி அம்மன் சந்நதி முன்பு புதிய ஷோபசி மண்டபம், வடக்கு வாசல், ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், சோமசுந்தரேஸ்வரர் தீர்த்தகுளம் புதுப்பிக்கபட்டுள்ளது. கோயில் கொடி மரத்திற்கு தங்க கவசம், நத்திக்கு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டுள்ளன. இதையடுத்து கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 6 ம் தேதி துவங்கி தொடர்ந்து நடக்கிறது.இன்று 6ம் கால யாகபூஜைகள் நிறைவடைந்த பின் சரியாக காலை 9.50 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபை, ஆயிரவைசிய சமூக நலச்சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
லண்டன்; தீபாவளி மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, லண்டனின் நீஸ்டனில் உள்ள பிஏபிஎஸ் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் இன்று நடைபெறும் புஷ்பயாகத்திற்காக நேற்று இரவு ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே, 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர்கால மூத்ததேவி கல் சிற்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar