பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
12:07
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி, மல்லிகேஸ்வரர் கோவிலில், நேற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது. கூடுவாஞ்சேரியை அடுத்த, மகாலட்சுமி நகர், விரிவு, 7ல் அமைந்துள்ள, மல்லிகேஸ்வரர் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக, 8ம் தேதி கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. வழிபாடுகளைத் தொடர்ந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு மூலவர், மரகதவல்லி சமேத மல்லிகேஸ்வரர் சன்னிதிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பச்சை வர்ண பெருமாள், பால விநாயகர், பால முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியினர் பெருந்திரளாக பங்கேற்றனர்.