திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் எண்ணெய் அறைக்குப் பின்னால் உள்ள சன்னதியில் சிறு சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, அனவரதர் சன்னதி என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், இச்சன்னதி அன்வருத்தீன் என்கிற பரம சிவபக்தரான ஒரு முஸ்லீம் பெரியவரின் அதிஷ்டானமே ஆகும். சிவபக்தியில் சிறந்து விளங்கிய அன்வருத்தீன் மேலப்பாளையத்துக்காரர். கடுமையான நோய் வந்து அவர் துன்புற்றபோது நெல்லையப்பர் அருளால் நோய் நீங்கப்பெற்றவர். நிறைய நிலங்களும் நெல்லையப்பருக்கு எழுதி வைத்திருக்கிறார். சிவ பக்தர் அன்வருத்தீன் கட்டளையாக இன்றைக்கும் சுவாமிக்கு மதியம் நைவேத்யமாக ரொட்டியும் வெண்ணெயும் படைக்கிறார்கள்.