வீரனார் கோவிலில் 3ம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2016 11:07
கிள்ளை: கிள்ளை வீரனார்கோவிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு பூர்த்தி விழா நாடார் நகர் சிவன்கோவில் விநாயகர், முருகன் மற்றும் சண்டி கேஸ்வரர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. கிள்ளை பொன்னந்திட்டு சாலையில் பழமைவாய்ந்த வீரனார்கோவில் உள்ளது. இக்கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று, மூன்றாம் ஆண்டு பூர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி, காலை கணபதி, நவக்கிர ஹோமங்கள், முதல் கால யாகசாலை சாலை பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு வீரன் சிலையில் புனித நீர் ஊற்றி தீபாராதனை செய்யப்பட்டது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பி ரதிஷ்டை விழா: நாடார் சிவன் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழாவில் புதிதாக விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர்.