பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
11:07
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பக தோப்பில் திருமலைநாட்டய்யனார், பேச்சியம்மன், ஸ்ரீராமர் மற்றும் பரிவார தேவதைகள் வீற்றிருக்கும் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி கடந்த 9 மாலை 4.30 மணிக்கு கணபதிஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. 2ம்நாள் யாகசாலை பூஜை, தீபராதனை நடந்தது. 3ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. விக்கிரம சிங்கபுரம் கல்யாணசுந்தரபட்டர் தலைமையில் விமானம் மற்றும் மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடந்தது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆண்டாள்கோயில் தக்கார் ரவிச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், துணைஆணையர் ஹரிஹரன், செயல்அலுவலர் ராமராஜா. ஸ்ரீவி.எம்,எல்.ஏ, சந்திரபிரபா, நகராட்சி தலைவர் செந்தில்குமாரி, வங்கி தலைவர் முத்துராஜ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாககுழு தலைவர் திருமலையப்பன், பொருளாளர் ஸ்ரீனிவாசன், உபதலைவர் தண்டபாணி,காரியதரிசி குஞ்சிதபாதம், உபகாரியதரிசி ஸ்ரீனிவாசன் செய்திருந்தனர்.