புதுச்சேரி: வன்னிய பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தி உற்சவம் இன்று (12ம் தேதி) நடக்கிறது.முதலியார்பேட்டையில் வன்னிய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதியில், அவதார தின உற்சவம் இன்று (12ம் தேதி) நடக்கிறது. உற்சவத்தை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு, கும்பஸ்தாபனம், சுதர்சன மகாமந்திர ஜபம் நடக்கிறது. இதைதொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, சுதர்சன சகஸ்ரநாம, மகாமந்திர ஹோமம், சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி சீனுவாசன் மற்றும் உற்சவதாரர்கள் செய்துள்ளனர்.