பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
12:07
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் கம்மவார்-ராவிலவார் குலம்-வல்லவட்டு கோத்திர பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட பாப்பம்மாள் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. தீர்த்தக்குடங்களில் புனித நீர் கொண்டுவரப்பட்டு கலசம், மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இரண்டாம் நாளில் விக்னேஸ்வர பூஜை, பாப்பம்மாள் அம்பிகைக்கு இரண்டாம் கால பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடந்தது. கலசங்கள் புறப்பாடுக்குப்பின் பாப்பம்மாள் கோயில் மஹா கும்பாபிஷேகம், மூலாலய மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் நடந்தது. விழாவில் குல தெய்வ வழிபாட்டின் சிறப்புகள் குறித்து ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் ரெங்கசாமி, டாக்டர்கள் பாப்பையா, மல்லிகா பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வேல்ராஜ், ராதாகிருஷ்ணன், எலக்ட்ரிசியன் ரவி ஆகியோர் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.