பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
12:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் சுவாமி கோவிலில், திருப்பணிகள் செய்யப்பட்டு, நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த, 9ம் தேதி காலை, சிறப்பு ஹோமம், முதற்கால யாக பூஜைகள், 10ம் தேதி காலை, விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. காலை, 8 மணிக்கு மண்டப பூஜை, விஷேச மூல மந்திர ஹோமங்கள், வேத பாராயணம் ஆகியவற்றை தொடர்ந்து, காலை, 9.45 மணிக்கு யாக சாலையில் இருந்து கும்பம் புறப்படும் நிகழ்ச்சியும், காலை, 10.25 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.