பழநிகோதீஸ்வரர், உஜ்ஜயினியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2016 12:07
பழநி: பழநி ஞானதண்டாயுதபாணிசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோதைமங்கலம் கோதீஸ்வரர், காமராஜர்நகர் உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு (ஜூலை 9ல்) காலை 7.45 மணி முதல் விநாயகர் பூஜை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. ஜூலை 10ல் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 3ம்கால யாகபூஜை நடந்தது. நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோதீஸ்வரர் கோயிலில் காலை 9 மணிக்குமேல் கும்பகலசங்கள் புறப்படாகி காலை 9.40 க்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதேபோல உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் காலை 7.25 மணிக்கு கும்ப கலசங்கள் புறப்படாகி காலை 9 மணிக்கு கோபுரத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தீயணைப்புத் துறையினர் ஸ்பிரே மூலம் பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்தனர்.