விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தில், செல்வ கணபதி, பார்த்த சாரதி, திரவுபதிஅம்மன், பொறையாத்தம்மன், அய்யனாரப்பன், பாலமுருகன், நவக்கிரகம் கோவில்கள் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, திரவுபதி அம்மன் கோவில் கலசத்திற்கு குமளம் தேவநாத பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பின்னர், அனைத்து கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.