பதிவு செய்த நாள்
13
ஜூலை
2016
11:07
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் நடைபாதை அமைக்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி, தெற்கு, கிழக்கு, வடக்கு மாட வீதிகளும், ஆர்.கே.மடம் சாலையும் உள்ளது. அங்கு,5.65 கோடி ரூபாய் செலவில், உலகத் தர நடைபாதையை, மாநகராட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, ஆறு மாதங்களுக்கு முன், நடைபாதை அமைக்கும் பணி துவங்கியது. அதற்காக, சாலையோரம், கிரானைட் கற்கள் கொட்டப்பட்டன. அதன்பின் பணி நடக்கவில்லை. சாலையோர கற்கள் சிதறி, போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து, வாகன ஓட்டிகளிடம் இருந்து வந்த புகாரையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் பணிகளை துவக்கியுள்ளனர்.
தாமதம் ஏன்?: இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சட்டசபை தேர்தல் நடத்தை விதியால், பணி நிறுத்தப்பட்டு இருந்தது. மீண்டும் பணியை துவக்கி உள்ளோம். விரைவில் முடிக்க திட்டமிட்டு உள்ளோம் என்றார்.