ஸ்ரீவில்லிபுத்துார்:பெரியாழ்வார் ஆனிசுவாதி விழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துாரில் செப்புதேரோட்டம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் உள்ள பெரியாழ்வார் சன்னிதியில்,கடந்த 4ம் தேதி ஆனி சுவாதி உற்சவம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாளான நேற்று காலை 8.20 மணிக்கு பெரியாழ்வார் செப்புதேருக்கு எழுந்தருள, ரகுராம பட்டர் தலைமையில் அனந்தராமன்,சுதர்சனன், வெங்கடேஷ பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, 4 ரதவீதிகளில் வலம் வந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.