மேலுார்: மேலுார் உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா நேற்று துவங்கியது. பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். மதியம் அன்னதானம், மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று (ஜூலை 13) முளைப்பாரி, பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா மற்றும் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், ஜூலை 14ல் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.