42 அடி உயர வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2016 12:07
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, உலக நன்மைக்காக, 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தூத்துக்குடிமாவட்டம், எட்டயபுரம், சிந்தலக்கரையில், காளிபராசக்தி தவசித்தர் பீடம் உள்ளது. இதன் இருமுடிமாலை திருவிழா நேற்று துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைக்குப்பின், உலக அனைத்து உயிர்களின் நன்மை, அமைதி, திருமணத்தடை நீங்கவேண்டி, 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகமும், வேள்வி பூஜையும் நடைபெற்றது. இவ்விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.