பதிவு செய்த நாள்
15
ஜூலை
2016
11:07
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு, ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவின் கடைசி நாளான நேற்று அம்மன் வீதி உலா நடந்தது.
ராஜராஜசோழன் கட்டிய ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பெரியகோவிலுக்கு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்காண பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகிறார்கள். இங்கு குறிப்பிட்ட நாட்களில் சதயவிழா,பி ராஹன் நாட்டியாஞ்சலி,ஆஷாட நவராத்திரி உள்ளிட்ட பல்வேறு விழாகள் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். அதைபோல, ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத கடைசியில் அமாவாசை தினத்தில் தொடங்கி பத்துநாள்கள் கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு பத்து வகையான சிறப்பு அலங்காரம் செய்து ஆஷாட நவராத்திரி விழா நடக்கும். இதையொட்டி பெரியகோவிலில் 14ம் ஆண்டு வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் மாலையில் வாராஹி அம்மனுக்கு மஞ்சள்,குங்குமம்,சந்தணம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகை, காய்கறி, புஷ்ப ஆகிய பத்து அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று அம்மன் வீதி உலா நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.