பதிவு செய்த நாள்
15
ஜூலை
2016
11:07
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த இறைஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இறைஞ்சியில் அமைந்துள்ள விநாயகர், முத்துமாரியம்மன், சீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை 4.430 மணிக்கு மூன்றாம் யாக சாலை பூஜை, இரவு 10.40 மணிக்கு ேஹாமங்கள், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று அதிகாலை 5:50 மணிக்கு கோ பூஜை, காலை 7:45 மணிக்கு விநாயகர், மாரியம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8:45 மணிக்கு வரதராஜ பெருமாள் விமானம், துவஜகம்பத்திற்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் வசந்தம்கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.