அன்னுார்: கோவில்பாளையம் அடுத்த வையம்பாளையத்தில், ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ சத்யபாமா சமேதர வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு விழா நடந்தது. காலையில், கும்ப ஆவாஹனமும், சுதர்ஸன ஹோமமும் நடந்தது. பின்னர் தி ருமஞ்சன பூஜையும், உச்சிகால பூஜையும் நடந்தது. வேணுகோபாலசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. வையம்பாளையம், கோட்டைபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பக்தர்கள் பங்கேற்றனர்.