பதிவு செய்த நாள்
15
ஜூலை
2016
11:07
காஞ்சிபுரம்: புனித கங்கை நீர் விற்பனை திட்டத்தை, காஞ்சி புரம் மாவட்டத்திற்கு, மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும் என, பல தரப்பினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது. புனித கங்கை நீர், பாட்டில்களில் அடைக்கப்பட்டு, அஞ்சலகங்களின் வாயிலாக விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கோவில்கள் நிறைந்த காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட அலுவலகங்களில் துவக்க வேண்டும் என, ஆன்மிகவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், புனித கங்கை நீர் விற்பனை திட்டம், காஞ்சிபுரம் மாவட்ட அஞ்சலக ங்களில் துவக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதாக, அதிகாரிகள் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
அவை:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய தலைமை அஞ்சலகங்களில், விற்பனை நிலைய வசதி இல்லை.
இரு தபால் கோட்ட அஞ்சலகங்களிலும், புனித கங்கை நீர் கேட்டு, ‘புக்கிங்’ செய்யும் வசதி இல்லை; டெலிவரி அளிக்கும் வசதி மட்டுமே உள்ளது.