நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயிலுள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால் சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.