பதிவு செய்த நாள்
16
ஜூலை
2016
11:07
ஊத்தக்கோட்டை;நாகலாபுரம் சாய் சாபா கோவிலில், வரும் 19ம் தேதி, குருபவுர்ணமியை ஒட்டி பால் அபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த ஆந்திர மாநிலம், நாகலாபுரம் கிராமத்தில் உள்ளது சாய் பாபா கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், குருபவுர்ணமி நாளில், பால் அபிஷேக நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு வரும், 19ம் தேதி, இவ்விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 5:30 மணிக்கு, காகட தீபாராதனை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை, 10:00 மணிக்கு, பால் அபிஷேகம் நடைபெறும். மதியம், 12:00 மணிக்கு, அலங்கார அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். மாலை, 6:30 மணிக்கு, சாய் பாபா திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.