திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, கிரிவலம் செல்வர். ஆடி மாத பவுர்ணமி நாளான நாளை, (19ம் தேதி) அதிகாலை, 4.51 மணி முதல், மறுநாள், 20ம் தேதி புதன்கிழமை அதிகாலை, 4.52 மணிவரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.