பதிவு செய்த நாள்
20
ஜூலை
2016
12:07
குன்னுார் : குன்னுார் அருகே, சித்தகிரியில் உள்ள ஷீரடி பாபா கோவிலில், குரு பூர்ணிமா தினத்தை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. குன்னுார் அருகே எடப்பள்ளி சித்தகிரி கிராமத்தில் உள்ள, கோவிலில், 7.6 அடி உயரமுள்ள ஷீரடி பாபா திருவுருவ சிலை கடந்த, 2013ம் ஆண்டு ஜூலை, 22ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நீலகிரியில், முதன் முறையாக இங்கு அதிருத்ர மகாயக்ஞம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இங்கு சித்தகிரி பகவான் சாய்பாபா அறக்கட்டளை தலைவர் சக்திமயி மாதா, செயலாளர் நந்துபாபா முன்னிலையில் நாள்தோறும், யாக வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு காலை, மதியம், மாலையில் உணவு வழங்கப்படுகிறது. மாவட்ட சத்ய சாய்பாபா நிர்வாகிகளின் சார்பில், நாள்தோறும் தியானம், பஜனை நடந்து வருகிறது. இந்நிலையில், குருபூர்ணிமா தினத்தையொட்டி, கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனை, பஜனை, சத்சங்கம் ஆகியவை காலை முதல் மாலை வரை நடந்தன. விழாவில், நீலகிரி மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.