பதிவு செய்த நாள்
20
ஜூலை
2016
01:07
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடி பூரத்திருவிழா 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிறது. ஆக.,1ல் சிவபூஜை அலங்காரம், 2ல் வெண்ணைத்தாழி சேவை, 4ல் தேரோட்டம், 5ல் தீர்த்தோல்சவம், யாக கும்பாபிஷேகம், 6ல் அம்பாள் தவசு, 7ல் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா நாட்களில் சிநேகவல்லிதாயார் கேடகம், காமதேனு வாகனம், அன்னம், கிளி, கமலம், குதிரை வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.