செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி பௌர்ணமி விழா நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். காலை 11 மணிக்கு செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து, 108 பால் குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பால் குடம் எடுத்து வந்த பெண்கள் பால் அபிஷேகம் செய்து, நேர்த்தி கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கரமும், தீபாராதனையும் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. இதில் செஞ்சி கூட்டுறவு விவசாய சங்க தலைவர் ரங்கநாதன், தொழில் அதிபர் சரவணன் மற்றும் விழா குழுவினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.