பதிவு செய்த நாள்
21
ஜூலை
2016
11:07
திருப்பூர்: திருப்பூர், நொய்யல் நதிக்கரையிலுள்ள செல்லாண்டியம்மன் கோவிலில், 10ம் ஆண்டு ஆடி குண்டம் விழா வரும் 26ல் நடைபெறுகிறது. அதையொட்டி, பூச்சாட்டு விழா, மகாமுனி பூஜை, மகா கணபதி ஹோமம், கொடியேற்றுதல், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், நொய்யல் நதிக்கரையில் இருந்து சக்தி அழைத்து வருதல் ஆகியன நடந்தது. விழாவின், ஒரு பகுதியாக, வீரராகவப்பெருமாள் கோவிலில் இருந்து செல்லாண்டியம்மனுக்கு சீர்வரிசை நிகழ்ச்சி, நேற்று நடந்தது. பெண்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்து, நாதஸ்வர மேளத்துடன், கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பக்தர்களுக்கு, அம்மன், மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில், இன்று மாலை, பி.என்., ரோடு கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து சூலம் எடுத்து வருதல் நடைபெறுகிறது.