மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் உள்ள சர்வமங்கள தியான பீடத்தின், 17ம் ஆண்டு துவக்க விழா, நாளை மாலை, 3:00 மணிக்கு நடைபெறுகிது. நடப்பு துன்முகி ஆண்டில் பூகம்பம், நிலநடுக்கம் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால், சர்வமங்கள தியான பீடத்தின் சார்பில் பூமிதோஷ நிவாரண பூஜை செய்யப்படுகிறது. தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளை குறைக்கவும், கால சர்ப்ப தோஷ நிவாரண பூஜையும் நடைபெறுகிறது. மகா சித்தர்கள் டிரஸ்ட் பிரம்ம ரிஷிமலை ராஜ்குமார் குருஜி ஆசியுரை வழங்குகிறார். சர்வமங்கள தியான பீட நிறுவனர் சர்வமங்கள குருஜி சிறப்புரை ஆற்றுகிறார்.